சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி தற்போது தனது தந்தையை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்றும், இவரை தனது தந்தை என்று சொல்லிக் கொள்வதற்கே தான் அசிங்கப்படுவதாகவும் காட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது இந்த தொடரில் அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனையை செய்து தமிழ் சின்னத்திரை உலகின் டாப் ஹிட் சீரியல் என்று நிரூபித்திருக்கிறது எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி அப்பத்தாவின் 40% பங்குகளை தன் பெயரில் மாற்ற ஆதி குணசேகரன் முயற்சித்து வருகிறார். முதற்கட்டமாக மருமகள்கள் பெயரில் இருந்த அனைத்து கம்பெனியையும் தன் பெயருக்கு மாற்றிவிட்டார். இதற்கிடையில் இன்று வெளியாகி இருக்கும்போது அப்பத்தாவின் 40 சதவீத பங்குகள் அனைத்தும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதை கண்டுபிடிக்க முடியாமல் ஜனனி ஒரு பக்கம் தவித்து வருகிறார். இதற்கிடையில் நேற்று ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினியின் நண்பர் ஒருவர் தர்ஷினியை தேடி வீட்டிற்கு வருகிறார். பாடத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்து தர்ஷினியிடம் விளக்கம் கேட்க இருப்பதாகவும் அவர் வீட்டிற்குள் வருகிறார். ஆனால் ஆதி குணசேகரன் அதை கடுமையாக எதிர்த்தார். அந்தப் பையன் உடனே வீட்டில் இருந்து வெளியேறும்படி அவர் கூறினார். ஆனால் தன்னை பேச்சை கேட்காமல் தர்ஷினி அவரை கூட்டிக்கொண்டு மாடிக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் ஆதி குணசேகரன் ஈஸ்வரி மற்றும் மற்ற மருமகள்களிடம் கடுமையாக சண்டை போடுகிறார். மேலும் தர்ஷினியின் நண்பர் கவினை வீட்டிலிருந்து வெளியேறும்படியும் கூறுகிறார். அப்போது கடுப்பாகி கத்திய தர்ஷினி, “நீங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று தெரிந்தும் இவனை வீட்டிற்கு அழைத்து வந்தது என் தப்புதான், உங்களையெல்லாம் அப்பா என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு அசிங்கமாக இருக்கிறது” என்று கூறுகிறார். இதனால் இன்றைய எபிசோடு அடுத்த பரபரப்பை எட்டி இருக்கிறது. இன்றைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சரியான சண்டை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv