10 நிமிஷம் தரேன் இங்கருந்து ஓடி போய்டு.! துப்பாக்கியை காட்டி ஆதி குணசேகரனை மிரட்டிய ஜீவானந்தம்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது நாளைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி மற்றும் குணசேகரன் ஆகியோரை சந்தித்து தற்போது ஜீவானந்தம் உரையாடிக் கொண்டிருக்கிறார். அந்த வாக்குவாதம் தற்போது சண்டையாக மாறுகிறது. எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான அடுத்தடுத்த கட்டங்களை எட்டி வரும் நிலையில் இன்று புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஆதி குணசேகரனின் கம்பெனி ஒன்றை கைப்பற்றும் ஜீவானந்தம் மற்றும் குழுவினர் அந்த இடத்தை தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு ஓடிவரும் ஆதி குணசேகரன் மற்றும் ஜனனி இருவரும் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஜீவானந்தத்தின் ஆட்களுக்கும் ஆதி குணசேகரனின் தம்பிகளுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

10 நிமிஷம் தரேன் இங்கருந்து ஓடி போய்டு.! துப்பாக்கியை காட்டி ஆதி குணசேகரனை மிரட்டிய ஜீவானந்தம்.! 1
அப்போது அங்கு வரும் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுட்டு சண்டையை நிறுத்துகிறார். பின்னர் ஜனனி ஒரு புறமும் ஆதி குணசேகரன் மற்றொருபுறமும் அமர்ந்திருக்க ஜீவானந்தம் உள்ளே வருகிறார். அப்போது நீதான் ஜீவானந்தமா? அப்பத்தாவின் கைரேகை எடுத்த திமிரில் ஆடிக் கொண்டிருக்கிறாயா என்று ஜனனி கேள்வி எழுப்புகிறார். அப்பொழுது ஓஹோ நீ தான் ஜனனியா என்று ஜீவானந்தம் ஜனனியை பார்த்து கேட்கிறார். பின்னர் ஆதி குணசேகரனை பார்க்கும் ஜீவானந்தம் உனக்கு பத்து நிமிடம் நேரம் கொடுக்கிறேன் இங்கிருந்து ஓடி விடு என்று ஆதி குணசேகரனை மிரட்டுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும்? ஆதி குணசேகரனின் 40 சதவீத பங்குகள் ஜீவானந்தத்திற்கு மாறிவிட்டதா என்றெல்லாம் முழுமையாக தெரியவில்லை. ஜீவானந்தமின் கூற்றுப்படி தற்போது அவர் பெயருக்கு சொத்துகள் மாறி இருக்கிறது.

இன்னொரு புறம் கோமா நிலையில் இருக்கும் ஆதி குணசேகரனின் அப்பத்தா அடிக்கடி ஜீவானந்தத்தின் பெயரை கூறிக் கொண்டிருப்பதால், ஜீவானந்தத்திற்கும் அப்பத்தாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த சஸ்பென்ஸ் அனைத்தும் வரும் வாரங்களில் உடைக்கப்படும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்