விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா சொன்ன கதை இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மிக மோசமான சம்பவம் குறித்து விசித்ரா மனம் உருகி பேசியிருந்தார். படப்பிடிப்பின் போது ஹீரோ அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி தவறான முறையில் அழைத்ததாகவும், அதன் பின்னர் பலரும் தன்னை டார்கெட் செய்து தவறான முறையில் நடத்த முயன்றததாகவும் கூறினார். கேரளாவில் நடந்து கொண்டிருந்த ஷூட்டிங்கில் ஹீரோ தன்னை இரவு அறைக்கு வரும்படி அழைத்தார். என் பெயர் கூட அவருக்குத் தெரியாது. ஆனால் நான் அவருடைய அழைப்பை ஏற்று செல்லாததால் பலரை அனுப்பி என் அறை கதவை தட்ட செய்தார். பின்னர் அடுத்த நாள் படப்பிடிப்பில் என்னை சிலர் தடவினார்கள்.

மீண்டும் மீண்டும் இதுபோல் நடந்ததால் என்னை தொட வந்த கையை இறுக்கிப்பிடித்து விட்டேன். பின்னர் அந்த நபரை அழைத்துக் கொண்டு ஸ்டண்ட் மாஸ்டரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறினேன். ஆனால் அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார் எனக்கு மேன் ஹேண்டலிங் நடந்த முதுகு, இடுப்பு பகுதிகளில் ரத்த கட்டுகள் ஏற்பட்டது. கன்னத்தில் அவர் அறைந்த தடமும் இருந்தது. இதற்காக யாரும் எனக்கு உதவவில்லை. நடிகர் சங்கத்திடம் முறையிடுமாறு சிலர் கூறினர். அப்படி செய்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை் அதனால் நான் திரைத்துறையை விட்டு விலக நேர்ந்தது. 20 வருடங்களாக இதனாலேயே எனக்கு வாய்ப்பு பறிபோனது என்று கூறி கண்கலங்கினார்.
Story Behind #Vichithra Today At The Task !! #BiggBossTamil #BiggbossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/9SavZBimjH
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) November 21, 2023
And I see still so many Telugu people are a big fan of this womaniser #Balakrishna
It's so heart breaking to hear this story #Vichitra 💔🥺 #BiggBossTamil7 #Vichithra 🏆 pic.twitter.com/YXyeuSnh8L
— BB cult (@MrV_0912) November 22, 2023
மேலும் சிலர் இரவு அறையை தட்டும் பொழுது மேலாளராக இருந்தது தற்போது எனது கணவராக இருக்கும் நவர்தான். அவர் என்னை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அறையில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்தார். எனவே அவரையே நான் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு என்றும் நன்றி உடையவளாக இருப்பேன் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் விசித்ராவை ரூமுக்கு அழைத்தது பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விசித்ரா கூறிய கதைகளும் பாலகிருஷ்ணாவின் ஒரு படத்தில் வரும் காட்சியும் ஒத்துப் போவதாக கூறி ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
#Vichithra shares her personal bitter experience while shooting 20 years ago! I think vichitra specified that worst incident in this fight scene.
Hero: balakrishna
movie :Bhalevadivi Basu(Telugu) and Stunt master who slapped her was a.vijay #BiggBoss7Tamil #BiggBossTamil7 pic.twitter.com/PkCcICvvbY— Vignesh (@Vignesh4cbe) November 21, 2023