ஆதி குணசேகரனை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு சென்ற ஜீவானந்தம் ஆட்கள்.! செம்ம சிரிப்பா இருக்கே.!

வெளியிட்டது

பல திருப்பங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஆதி குணசேகரனை ஜீவானந்தத்தின் ஆட்கள் குண்டுக். கட்டாக தூக்கிக்கொண்டு செல்கின்றனர் இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு கமெண்டில் ஆதி குணசேகரனைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த ஒரு தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து வருகிறது் ஆதி குணசேகரனின் அப்பத்தா பெயரில் இருக்கும் 40 சதவீத பங்குகள் தனக்கு தான் கிடைக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, தற்போது ஜீவானந்தம் அந்த சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி இருக்கிறார். இதனால் பரபரப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு சென்ற ஜீவானந்தம் ஆட்கள்.! செம்ம சிரிப்பா இருக்கே.! 1
கதிரின் பெயரில் இருக்கும் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தற்போது ஜீவானந்தம் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஜீவானந்தம் ஆதி குணசேகரனின் சொத்துக்கள் பலவற்றை எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தம் ஆதி குணசேகரனைப பார்த்து வெளியில் வந்து கொஞ்சம் நேரம் உட்கார்ந்திரு, பின்னர் உனக்கே தெரியும் உன்னிடம் எவ்வளவு சொத்துக்கள் மீது இருக்கிறது என்று சொல்லிவிட்டு போகிறார். அப்போது ஃபேக்டரியில் வந்து அமர்ந்திருக்கும் ஆதி குணசேகரன் ஜனனியை பார்த்து இவள் தான் ஏதோ திட்டம் தீட்டி கொடுத்திருக்கிறாள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறான் என்றால் இவள் தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று ஜனனி மீது கோபப்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரன் கோபப்பட்டு ஜீவானந்தனிடம் பேச அந்த நேரம் பார்த்து கௌதம் வருகிறார். கௌதமை பார்த்த ஜனனி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின்னர் ஓவராக கத்திக் கொண்டிருக்கும் ஆதி குணசேகரனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியில் செல்கின்றனர். இந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்