ஐயோ எல்லாம் போச்சே.! ஆதி குணசேகரனுக்கு ஆப்பு மேல் ஆப்பு.! பாவமாக வெளியேறிய AGS.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் காவல் நிலையத்திற்கு செல்லும் ஆதி குணசேகரன் தற்போது சட்டை எல்லாம் அவிழ்த்துவிட்டு அனைத்தையும் இழந்தது போல நடந்து செல்கிறார். இதனால் போலீசும் ஜீவானந்தத்தின் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி அனுப்பி இருக்க கூடும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு சீரியலாகும். டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தைப் பிடித்து வரும் இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் அப்பத்தாவாக இருக்கும் பட்டமாளின் 40 சதவீத பங்குகள் தற்போது ஜீவானந்தத்தின் பெயருக்கு மாறியிருக்கிறது. ஜீவானந்தம் ஜனனியின் ஆள் என்று ஆதி குணசேகரனும், அவர் ஆதி குணசேகரனின் ஆள் என்று ஜனனியும் இத்தனை நாள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயோ எல்லாம் போச்சே.! ஆதி குணசேகரனுக்கு ஆப்பு மேல் ஆப்பு.! பாவமாக வெளியேறிய AGS.! 1

ஆனால் இது எதுவுமே இல்லாமல் ஜீவானந்தம் யார் என்கிற கேரக்டரே புரியாமல் தற்போது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜீவானந்தம் யார்.? அவர் எதற்காக அப்பத்தாவின் 40 சதவீத பங்குகளை பறித்தார்.? அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு.? கோமாவில் இருக்கும் அப்பத்தா கடைசியாக ஜீவானந்தத்தின் பெயரை கூறியதற்கான காரணம் என்ன? என பல்வேறு கேள்விகள் எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஜீவானந்தம், பர்ஹானா, ஆதி குணசேகரன், ஞானம் மற்றும் கதிர் என அனைவரும் காவல் நிலையத்திற்கு வருகின்றனர். அப்போது காவல் நிலையத்தில் ஆதி குணசேகரன் மற்றும் ஜீவானந்தத்திற்கு இடையே சண்டை முற்றுகிறது. பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை, சட்டையை அவிழ்த்துக்கொண்டு மிகவும் சோகத்துடன் ஆதி குணசேகரன் வெளியேறுகிறார்.


இதனால் அடுத்து என்ன நடந்திருக்கும் என்கிற பரபரப்பு இந்த சீரியலில் எழுந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ஜனனி வீட்டில் உள்ள அனைவரிடமும் கௌதம் ஜீவானந்தத்தின் ஆள் என்கிற உண்மையையும், என்ன நடந்தது என்கிற உண்மையையும் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வீடு யார் பெயரில் இருக்கிறது? வீட்டில் இருக்கும் அப்பத்தாவின் பங்குகளும் அந்த 40% க்குள் வருகிறதா? என்றெல்லாம் தெரியவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்