திருமணத்திற்கு வரமால் பாதியில் ஓடிய ரோகிணி.! மனோஜ் திருமணம் நடக்குமா? சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!

விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட் தொடராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஆரம்பித்து பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது சிறக்கடிக்க ஆசை. புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே மக்களின் மனங்களில் இடம் பிடித்து டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியில் முன்னிலை வகிக்கும் சீரியலாகவும் இந்த சீரியல் தற்போது இருந்து வருகிறது.

இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் ஆரம்பத்தில் சீரியலின் கதாநாயகன் முத்து, தண்ணி அடித்துக் கொண்டு ஊதாரியாக திரியும் ஒரு நபராக இருக்கிறார். அவருக்கு குடும்ப பாங்கான பெண்ணான மீனாவுடன் திருமணம் நடக்கிறது. எதிர்பாராத விதமாக நடக்கும் இந்த திருமணம் இவர்கள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த கதையாக தான் இது இருந்து வருகிறது. தற்போது கதையில் திருப்பமாக முத்துவும் மீனாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்திருக்கின்றனர். மறுபுறம் மனோஜ்க்கும் ரோகிணிக்கும் விஜயா திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சிறுவனுக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் - விக்ரமன்.!

முத்துவின் தயாராக இருக்கும் விஜயா தனது மூத்த மகன் மனோஜ் மீதுதான் மிகவும் அக்கறை கொள்கிறார். அவருக்கு தனது இளைய மகனை சுத்தமாக பிடிக்காது, படிக்காதவர் என்பதாலும் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பவர் என்பதாலும் முத்துவை காட்டிலும் மனோஜ் மீது தான் அவருக்கு அதிக அக்கறை இருந்து வருகிறது. இந்த நிலையில் மனோஜுக்கும் ரோகிணிக்கும் திருமண ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

விளம்பரம்

மனோஜின் திருமணத்திற்காக அனைவரும் கோயிலுக்கு செல்கின்றனர். ரோகினி மனோஜை திருமணம் செய்து கொண்டால் உண்மையை சொல்லப் போவதாக ஆபீஸில் வேலை செய்யும் ஒருவர் போன் செய்து மிரட்டுகிறார். இதனால் ரோகிணி கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று காரிலிருந்து பாதி வழியில் இறங்குகிறார்.

மறுபுறம் முத்து ரோகிணி வராத காரணத்தினால் இந்த பொண்ணும் ஓடிப் போய்விட்டதா, பொண்ணு வந்தால் சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்று சொல்லி மீனாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். மேலும் மீனாவின் தங்கைதான் திருமணம் ஆகாமல் இருக்கிறார். அவரை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுவோம் இல்லை என்றால் அவரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று மீனாவையும் பயமுறுத்துகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment