சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினி – சித்தார்த் திருமணத்திற்கு உமையாள் மற்றும் குணசேகரன் இருவரும் ஏற்பாடுகளை நடத்திவரும் நிலையில், வீட்டிலிருந்து சித்தார்த் காணாமல் போகிறார். இதனால் தர்ஷினி மற்றும் சித்தார்த்தின் திருமண ஏற்பாடுகள் நின்று போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியல் இல்லத்தரசிகள் பலரும் பார்த்து ரசிக்கும் சீரியலாக இருந்த வருகிறது. ஆனால் சில நாட்களாகவே இந்த சீரியலில் பல குளறுபடிகள் நடந்து வருகிறது. தர்ஷினி காணாமல் போய் வீடு திரும்பியதில் இருந்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வைக்கும் காட்சிகள் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வருவதால் தற்போது சீரியலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
விரைவில் கதைக்களத்தை மாற்ற ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தர்ஷினியை திருமணம் செய்ய சித்தார்த்த் காணாமல் போகிறார். இந்த உண்மையை உமையாள் குணசேகரனிடமிருந்து மறைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV