ஒரு வழியா தாராவுக்கு காது குத்தியாச்சு.! ‘எதிர்நீச்சல்’ சீரியலின் அடுத்த வார ப்ரோமோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது அனைவரும் இணைந்து தாராவின் காது குத்து விழாவை சிறப்பாக நடத்துகின்றனர். இந்த மொய் பணத்தில் வரும் பணத்தை கொண்டு, புதிய தொழில் தொடங்க அனைவரும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவிற்கு வெற்றி பெறும்? என வரும் வாரங்களில் தான் தெரிய வரும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வழியா தாராவுக்கு காது குத்தியாச்சு.! 'எதிர்நீச்சல்' சீரியலின் அடுத்த வார ப்ரோமோ.! 1

புதிய தொழில் தொடங்குவதற்கு தாராவின் காது குத்து விழாவை காரணமாக வைத்து ‘எதிர்நீச்சல்’ குடும்பத்தினர் காய்களை நகர்த்தி வருகின்றனர். இதில் வரும் மொய் பணத்தைக் கொண்டு புதுதொழிலை தொடங்கி விடலாம் என அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் குணசேகரனின் பெயர் இல்லாமல் மற்றவர்களின் பெயர்களை மட்டுமே போட்டு பத்திரிக்கை அடித்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால் குணசேகரன் இந்த விழாவில் ஏதும் பிரச்சனை செய்வாரா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி நந்தினியிடம் என்ன திட்டம்? என்று கேட்கிறார். அதற்கு நந்தினி, “ஏசி காரை பிடித்து தாராவை அழைத்துக் கொண்டு போய், காது குத்தி, மொய் விருந்து நடத்தி, மொய் பணத்தைக் கொண்டு புதிய தொழிலை தொடங்கலாம்” என கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்