சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஞானத்திற்கு கொடுத்த கடனை திருப்பி கேட்டு கடன்காரன் வீட்டிற்கு வந்த நிலையில், அது குறித்து தற்போது சண்டை வருகிறது. குணசேகரன் கோபத்தில் ஞானத்தை திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா? என்று மிகவும் மோசமாக பேசுகிறார். இதனால் கோபமடைந்த ஞானம் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் தாராவுக்கு மொய் விருந்து செய்து, அதில் வரும் பணத்தை கொண்டு தொழில் தொடங்கலாம் என நந்தினி திட்டம் போடுகிறார். ஆனால் மொய் விருந்திற்கு வந்தவர்கள், பத்திரிக்கையில் குணசேகரன் பெயர் இல்லை என்கிற காரணத்தினால் மொய் செய்யாமலேயே திரும்பி சென்று விடுகின்றனர். இதனால் ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா, ஞானம், சக்தி உள்ளிட்டவர்கள் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து நந்தினிக்கு தொழில் தொடங்க உதவுகின்றனர். இதில் ஞானம் ஒருவரிடம் கடன் வாங்கி வந்து இரண்டு லட்ச ரூபாயை மொய் வைக்கிறார்.
ஆனால் ஞானத்திற்கு கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து கேட்பதால் குணசேகரன் கோபமடைகிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. ஞானத்திடம் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வியாடா? என அசிங்கமாக கேட்கிறார். இதனால் கோபமடைந்த ஞானம், ஆதி குணசேகரனை எதிர்த்து கற்றுகிறார். ஞானத்தின் கோபத்தை பார்த்த குணசேகரன் வாயடைத்துப் போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv