மக்களிடம் தோற்றுப்போன ‘எதிர்நீச்சல்’ சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.!

சன் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது இந்த அறிவிப்பு. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் விரைவில் நிறைவடையப் போகிறது என்கிற அதிர்ச்சி அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 7, 2022 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’. ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்ட வீட்டில் திருமணம் செய்து கொண்டு வரும் படித்த பெண்கள் படும் கஷ்டங்களையும், அவர்கள் எப்படி இதையெல்லாம் எதிர்த்து போராடுகிறார்கள் என்கிற கதையையும் மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டு வந்தது.

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 1

விளம்பரம்

இந்த தொடரில் சத்ய பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா, மதுமிதா, விபுராமன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சில மாதத்திற்கு முன்னர் மாரிமுத்து ஆதி குணசேகரனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் திடீரென ஒரு நாள் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அன்று தொடங்கி இந்த சீரியலின் சரிவு ஆரம்பமானது. அவருக்குப் பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை விட்டு சென்றிருந்தார் மாரிமுத்து. அவருக்காகவே ரசிகர்கள் இந்த நாடகத்தை பார்க்க தொடங்கினர் ஆனால் எல்லாம் ஒரு கணத்தில் தலைகீழாக மாறிப்போனது. அவருக்குப் பின்னர் வேல ராம மூர்த்தி, ஆதி குணசேகரனாக நடிக்கத் தொடங்கியதும், சீரியலை பார்ப்பதை பலரும் நிறுத்திவிட்டனர்.

தொடர்புடையவை  பிரியங்காவை மரணமாக கலாய்த்த ராமர்.! அடக்க முடியாமல் சிரித்த பிரியங்கா.! ப்ரோமோ இதோ.!

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 3

விளம்பரம்

மாரிமுத்து தனது எதார்த்தமான நடிப்பாலும், காமெடியான பேச்சாலும் வில்லத்தனங்களை கூட காமெடியாக செய்து வந்தார். ஆனால் வேலராமமூர்த்தி வந்த பிறகு ரசிகர்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பித்தது. ஆதி குணசூகரன் கதாபாத்திரம் கொடும் வில்லனாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சீரியல் நெகட்டிவாக மாற ஆரம்பித்தது. ‘எதிர்நீச்சல்’ பெண்கள் மாரிமுத்து விடம் தோற்றுப் போவதை ரசித்துப் பார்த்த ரசிகர்கள், வேலராமமூர்த்தி இடம் தோற்றுப்போவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் சீரியலை திறந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து தினமும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆதிகுணசேகரன் தனது தம்பிகளையும் தம்பி மனைவிகளையும் அவ்வளவு கேவலப்படுத்தும் போதிலும் சுயமரியாதை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்கு ஒரே வீட்டில் இருந்து கொண்டு அவரிடம் கேவலத்தையும் வாங்கிக் கொண்டும், தோற்றுக் கொண்டும்,  கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பது சீரியல் ரசிகர்களை ஒரு கட்டத்தில் சோர்வடைய வைத்தது.

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 5

விளம்பரம்

இது குறித்து ப்ரோமோக்களில் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனருக்கு கதையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இயக்குனரோ அதை காதில் வாங்கிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆதிகுணசேகரனும், அவரது தாயார் விசாலாட்சியும் போதாக்குறைக்கு தர்ஷனும் பேசும் கீழ்த்தரமான வசனங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.  எனவே ரசிகர்கள் ப்ரோமோக்களை கூட பார்க்காமல் அப்படியே நிறுத்தி இருந்தனர். தினமும் வெளியாகும் ப்ரோமோக்கள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வந்த நிலையில், ஒரு லட்சம் பார்வையாளர்களை கூட பெறாமல் ப்ரோமோக்கள் பின்னுக்கு சென்றிருந்தன. இந்த நிலையில் திடீரென பல கதாபாத்திரங்களை உள்ளே புகுத்தி இருந்தார் இயக்குனர்.

தொடர்புடையவை  "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 7

விளம்பரம்

ஏற்கனவே கௌதம், ஆதிரை, அருண், அப்பத்தா, ஜீவானந்தம், வெண்பா, கொற்றவை, உமையாள், கிருஷ்ணசாமி, ராமசாமி, சித்தார்த் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு விடை தெரியாமல் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிது புதிதாக கதாபாத்திரங்களை இணைக்க தொடங்கினார் இயக்குனர். இந்த நிலையில் எந்த ஒரு முடிவும் தெரியாமல் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. சக்தி ஜனனி இருவரும் புது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். ரேணுகாவும் நடனப் பள்ளியை தொடங்க இருக்கிறார். நந்தினியும் மசாலா பிசினஸை தொடங்க இருக்கிறார். இப்படியாக பெண்கள் ஆதி குணசேகரன் எதிர்த்து தங்களது வாழ்க்கையில் வெற்றி நடை போட இருக்கின்றனர்.

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 9

விளம்பரம்

அதேபோல் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடக்கப்போகிறது. தன்னை கடத்தியது தனது தந்தை தான் என்கிற உண்மையை தர்ஷினி வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைத்து இருக்கிறார். எனவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த அடுத்த விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க இருக்கிறது. இப்படியாக இந்த சீரியலை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிலர் சீரியல் முடியப்போகிறதே என்ற சோகத்தில் இருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு நெகட்டிவ்வான சீரியலை எடுத்த திருச்செல்வம் இனியாவது தனது போக்கை மாற்றிக் கொண்டு நல்ல சீரியல்களை எடுக்க வேண்டும்.

தொடர்புடையவை  Modhalum Kaadhalum | தமிழ் - தெலுங்கு முறைப்படி நடக்கும் விக்ரம் வேதா திருமணம்.! பந்தக்கால் நடும் நிகழ்ச்சி.!

மக்களிடம் தோற்றுப்போன 'எதிர்நீச்சல்' சீரியல்.! அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.! அதிர்ச்சி தகவல்.! 11

விளம்பரம்

‘கோலங்கள்’ சீரியலை எடுத்தது போல் வழவழவென்று ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என இயக்குனர் நினைப்பது தவறு. அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ரசிகர்கள் சேனலை மாற்றிக் கொண்டு சென்று சென்று விடுவார்கள். ரசிகர்கள் நல்ல கருத்தான கதைகளையே விரும்புகின்றனர். இதுபோல நெகட்டிவ் சீரியல் மக்கள் மத்தியில் இனி எடுபட போவதில்லை என்று அவரை வசைப்பாடியும் வருகின்றனர். இந்த தொடர் முடிந்த பின்னர் ராகுல் ரவியும், கேப்ரியல்லாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர்பான ‘மருமகள்’  ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்

Leave a Comment