“பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்” எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனியின் தாயார் பார்வதியின் தாலியை கழட்டி கொடுக்கும்படி அவரது கணவர் நாச்சியப்பனின் சகோதரி வந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆதி குணசேகரனும் துணை போய்க்கொண்டிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜனனி திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “பள்ளி படித்துக் கொண்டிருக்கும் தர்ஷினிக்கு திருமணம் செய்து வைப்பது, நடுரோட்டில் ஆதிரைக்கு திருமணம் செய்து வைப்பது, தாலியை கழட்டிக் கேட்பது, தாலியை அறுத்து வீசுவது” என்று எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாக கருத்துக்களவ தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 1
‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் நாச்சியப்பனின் சகோதரி ஆதி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். அங்கு நாச்சியப்பனின் மனைவியும், ஜனனியின் தாயாரமான பார்வதியிடம் தாலியை கழட்டி கொடுக்கும்படி கேட்கிறார். இதற்கு ஆதி குணசேகரனும் துணை போகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆதிரைக்கு நடுரோட்டில் தாலி கட்டும்படி செய்தது. பின்னர் ஆதிரை தாலியை கழட்டி கரிகாலன் முகத்தில் வீசியது, பள்ளிக்கு படித்துக் கொண்டிருக்கும் தர்ஷினியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய கரிகாலன் முயற்சிப்பது, அவரை வண்டியில் கடத்துவது போன்று பிற்போக்குத்தனங்கள் நிறைந்த காட்சிகள் சில காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  கணவருடன் இருக்கும் புகைப்படங்களை முதல் முறையாக பதிவிட்ட சுந்தரி சீரியல் கேபிரியல்லா.!

"பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 3 "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 5 "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 7 "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 9 "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 11 "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 13
இது குறித்து கருத்து கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள், இதுபோன்ற முட்டாள் தனங்களை என்றைக்கு நிறுத்தப் போகிறீர்கள்? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாரிமுத்து இறப்புக்கு பின்னர் டி ஆர் பி ரேட்டிங்கில் பலத்த அடி வாங்கி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் இது போன்ற பிற்போக்கு கதைக்களங்களால் இன்னும் பின்னுக்கு செல்ல போவது உறுதி என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment