சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அப்பத்தாவின் புடவையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் ஜனனி அப்பத்தாவை இவர்கள் அனைவரும் இணைந்து கொலை செய்து விட்டார்கள் என்று கூறி அழுகிறார். அதைக் கேட்கும் மருமகள் மற்றும் விசாலாட்சி, ஞானம் என அனைவரும் கதறி அழுது கொண்டிருக்கிறனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வீட்டிற்கு வரும் ஜனனி அழுது கொண்டே அப்பத்தாவின் புடவையை எடுத்துக் கொண்டு வந்து நந்தினியின் கைகளில் கொடுக்கிறார். இவர்கள் அனைவரும் இணைந்து அப்பத்தாவை கொலை செய்து விட்டார்கள் என்று கூறுகிறார். இதைக் கேட்ட விசாலாட்சி மற்றும் ஞானம் கண்ணீர் விட்டு அழுகின்றனர். அப்போது அங்கு வரும் கரிகாலன், “ஒரு நிமிடம் தான் தாமதம் அனைவரும் துண்டு துண்டாக இருப்போம்” என்று கூறுகிறார்.
அதை கேட்ட சக்தி, “போதும் நிறுத்து, இன்னும் எத்தனை காலம்தான் இந்த பொய்யை சொல்லிக் கொண்டு திரிவீர்கள்?” என்று கரிகாலனை திட்டுகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விட்டதாக கூறுகிறார். அப்போது விசாலாட்சி, “இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அவனுக்கு வக்காலத்து வாங்கி பேசுவாய், உங்களுக்கெல்லாம் என்ன வசியம் செய்தான்? என்று கேட்க, கோபமடைந்த ஈஸ்வரி விசாலாட்சியை திட்டித் தீர்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV