பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் என்கிற அடையாளத்துடன் திரைத்துறைக்கு நடிக்க வந்தவர் அதிதி சங்கர். கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘விருமன்’ படத்தில் ‘மதுரவீரன் அழகுல’ என்கிற பாடலையும், ‘மாவீரன்’ படத்தில் ‘வண்ணாரப்பேட்டையில’ என்கிற பாடலையும் பாடியிருந்தார்.

ஷங்கரின் மகள் என்பதாலேயே இவருக்கு தொடர்ந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும் மதுரவீரன் பாடலை முதலில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பாட, அதை நீக்கிவிட்டு அதிதியை படக்குழுவினர் பாட வைத்திருந்தனர். அதேபோல வண்ணாரப்பேட்டையிலே பாடலையும் பாடகி ஒருவர் பாடியிருந்த நிலையில், அதையும் நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருந்தனர். மேலும் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட. வரவேற்பு நிகழ்ச்சியிலும் இவரது பரதநாட்டியம் இடம்பெற்று இருந்தது. இதனால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த அதிதி சங்கருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது தான் படித்த மருத்துவத்துறைக்கு திரும்பி இருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவராக உடை அணிந்து, ஐடி கார்டுடன் அமர்ந்திருப்பது போல புகைப்படத்தை பகிர்ந்து Dr.A என்று பதிவிட்டுள்ளார். இதனால் இவர் இனி படங்களில் நடிப்பாரா? அல்லது பட வாய்ப்பு வரும்வரை மருத்துவர் பணியை தொடர்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் சினிமா மீது இருந்த ஆசை காரணமாக நடிக்க வந்தார். தற்போது இவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டாரா? என்பதை இன்னும் விளக்கவில்லை. இருப்பினும் அதிதியின் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள் என்று பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram