கதிரை சந்தேகப்பட்டு வீட்டுக்கு வந்த போலீஸ்.! அப்போ இன்னைக்கும் ஆதி குணசேகரன் என்ட்ரி இல்லையா?

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் ஆதி குணசேகரன் இன்று சீரியல் என்ட்ரி கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் என்ட்ரி கொடுக்காமல் இருக்கிறார். அந்த புதிய ப்ரோமோவை தற்போது விஜய் சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவுக்கு பின்னர் யார் ஆதி குணசேகரனாக நடிக்க இருக்கிறார் என்கிற பரபரப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிரை சந்தேகப்பட்டு வீட்டுக்கு வந்த போலீஸ்.! அப்போ இன்னைக்கும் ஆதி குணசேகரன் என்ட்ரி இல்லையா? 1
இந்த நிலையில் நேற்று இரவு வெளியான ப்ரோமோவில் வேலராம மூர்த்தி புது ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுப்பது போல் வீடியோ வெளியாகி இருந்தது. பலகட்ட முயற்சிக்குப் பின்னர் வேலராமமூர்த்தியை எதிர்நீச்சல் சீரியல் டீம் இறுதி செய்துள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் என்ட்ரி இன்று இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்றைய ப்ரோமோவில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சமைத்துக் கொண்டு வந்து வைக்கும் மருமகளை விசாலாட்சி திட்டுகிறார். இவ்வளவு நேரம் ஏதோ பேசிவிட்டு எதுவும் தெரியாதது போல இப்ப சமைத்து வைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் ரேணுகா நீங்கள் சமைக்கவில்லை என்றால் கேள்வி கேட்பீர்களே? என பதிலளிக்கிறார்.


பின்னர் இன்று தனது மகன் வீட்டிற்கு வர இருக்கிறான் என எனக்கு போன் செய்து சொன்னான் என்று விசாலாட்சி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, திடீரென வீட்டிற்கு ஆதி குணசேகரனைத் தேடி காவல்துறை வருகிறது. அப்போது ஞானத்திடம் உங்கள் அண்ணன் குணசேகரன் எங்கே என்று கேட்க, அண்ணனை காணவில்லை என்று யாராவது உங்களிடம் புகார் அளித்தார்களா என ஞானம் கேட்கிறார். அப்போது குறுக்கிடும் சக்தி, ஆமாம் அண்ணனை காணவில்லை என நான் தான் புகார் அளித்தேன் என்று கூறுகிறார். இதனால் இன்றைக்கு ஆதி குணசேகரன் வருகை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்