எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சக்தியும் ஜனனியும் இணைந்து புதிய தொழில் தொடங்கப் போகும் செய்தியை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூற குணசேகரன் அவர்களை திட்டி தீர்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் எதிர்நீச்சல். அடுத்து என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாத அளவிற்கு பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பத்தா தனது 40% பங்குகளை ஜீவானந்தத்திடம் கொடுத்து வைத்திருந்தார். தற்போது அனைத்தையும் தன் பெயருக்கே மாற்றிவிட்டார். இன்னும் ஒரு வாரத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப் போகிறேன் என்று சொல்லி அதிரடி காட்டி இருக்கிறார் அப்பத்தா. இந்த நிலையில் அப்பத்தாவை கொலை செய்துவிட்டு மொத்த சொத்தையும் அபகரித்துக் கொள்ள குணசேகரன் திட்டம் தீட்டி வருகிறார். இந்த நிலையில. இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கரிகாலனையும் ஆதிரையையும் ஹனிமூனுக்கு அனுப்ப குணசேகரன் திட்டமிடுகிறார்.
இருவரையும் கொடைக்கானலுக்கு அனுப்ப பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சக்தியும் ஜனனியும் வந்து புதிய தொழில் தொடங்கப் போகும் விஷயத்தை விசாலாட்சியிடம் கூறி கம்பெனி திறப்புக்கு நல்ல நாள் பார்த்து கூறுமாறு கேட்கிறார். அப்போது குணசேகரன், “யாரு வீட்டுல வந்து யாரு கடையை போடுறது” என்று கத்துகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV