ரஜினி இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கும் புது வெப் சீரிஸ் “கேங்ஸ்” பூஜையுடன் தொடக்கம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளாக இருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து கேங்ஸ் என்கிற புது வெப் சீரிஸ் ஒன்றை அவர் தயாரிக்க இருக்கிறார். இதற்கான பட பூஜைகள் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினி இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கும் புது வெப் சீரிஸ் "கேங்ஸ்" பூஜையுடன் தொடக்கம்.! 1

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களாக இருக்கும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே திரைத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐஸ்வர்யா ஏற்கனவே மூன்று, வை ராஜா வை போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். அதேபோல சினிமா வீரன் என்கிற டாக்குமென்டரி ஃபிலிம் ஒன்றை அவர் எடுத்திருந்தார். தற்போது லால் சலாம் என்கிற படத்தை அவர் இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  எதுக்கு..?தேவையில்லாத வேலை பார்த்து சண்டை மூட்டிவிட்ட ப்ளூ சட்டை மாறன்...அடித்து கொல்லும் ரசிகர்கள்.

ரஜினி இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கும் புது வெப் சீரிஸ் "கேங்ஸ்" பூஜையுடன் தொடக்கம்.! 3
தற்போது ரஜினியின் இளைய மகளாக இருக்கும் சௌந்தர்யாவும் திரைத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே கோச்சடையான் என்ற படத்தை இயக்கிய அவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். மேலும் சில படங்களை தயாரித்தும், கிராஃபிக் டிசைனராக பணியாற்றியும் இருக்கிறார். இந்த நிலையில் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாக சமூக வலைத் தளங்களில் அறிவித்திருக்கிறார். நௌ ஆபிரகாம் என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

விளம்பரம்

ரஜினி இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கும் புது வெப் சீரிஸ் "கேங்ஸ்" பூஜையுடன் தொடக்கம்.! 5
இந்த வெப் தொடரில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள சௌந்தர்யா, “இன்றைய நாள் நல்ல நாளாக தொடங்கியது, இந்த வெப் தொடரை தயாரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன், நௌ ஆப்ரஹாம் இந்த வெப் தொடரை இயக்க, அசோக் செல்வன் நடிக்க இருக்கிறார். இது ஒரு சிறந்த குழுவாக இருக்கிறது. இந்தக் குழு அமேசான் பிரைம் உடன் உடன்பாடு செய்துள்ளது. கடவுளின் அருளால் அற்புதமான காலங்கள் நிகழட்டும்” என்று பதிவிட்டுள்ளார். பலரும் சௌந்தர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Twitter Original Source From: Soundarya rajnikanth

விளம்பரம்

Leave a Comment