சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இன்று யாரும் எதிர்பாராத விதமாக காலமாகி இருக்கிறார். டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்த அவரின் உடல் சென்னையில் இருந்து இறுதி சடங்கிற்காக தேனி வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாக வேண்டிய ப்ரோமோ தாமதமாக தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் சக்திக்கும் ஞானத்துக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தியும் ஜனனியும் இணைந்து காருக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்க இருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனது தாய் தனக்காக கொடுத்த நகைகளை விசாலாட்சி சக்தியிடம் கொடுக்கிறார். அதை குணசேகரன் எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது விசாலாட்சி இது ஒன்றும் உன்னுடைய நகைகள் கிடையாது, என் தாயார் எனக்கு போட்ட நகைகள் என்று சொல்லி குணசேகரனை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ஞானம் திடீரென சக்தியை அடிக்கப்பாய்கிறார். அப்போது சக்தி சோத்துக்காகவும் காசுக்காகவும் இது போல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை என்று பேசுகிறார்.
பின்னர் நீங்கள் என்னென்ன தவறுகள் செய்தீர்கள் என்கிற உண்மையை கூறவா என்று சக்தி கேட்கிறார். அப்போது என்ன உண்மை என்று குணசேகரன் கேட்க, ஜனனி சில விஷயங்களை கூறுகிறார். இதனால் கதிர் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். ஜனனி ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது இந்த கூட்டம் தான் என்ற உண்மையை கூறிவிடுவாரோ என்கிற பதட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV