படம் சூர மொக்கை.! அட்லீ ஒரு Cringe Pro Max.! ஜவான் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றோர் பலர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது ஹீரோ மற்றும் ஆறு பெண்கள் சேர்ந்து மெட்ரோ ரயிலை கடத்தி வைத்து இருக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்திடம் 40,000 கோடி கேட்டு மிரட்டுகின்றனர். அதில் சேதுபதி மகளையும் கடத்தி வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்கின்றனர். பின்னர் 40,000 கோடி கிடைத்த பின்பு விவசாய கடன்களை அடைக்கின்றனர். அந்த ஆறு பெண்களும் ஷாருக்கானும் யார் என்று பார்த்தால் ஷாருக்கான் ஜெயிலராக இருக்கிறார். ஆறு பெண்கள் கைதிகளாக இருக்கின்றனர். இந்த படத்திற்கு தான் ஜெயிலர் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் சூர மொக்கை.! அட்லீ ஒரு Cringe Pro Max.! ஜவான் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 1

விளம்பரம்

விஜய் சேதுபதியின் மகள் ஷாருக்கானைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது. அப்போது ஷாருக்கான் அந்த ஆறு பெண்கள் பற்றிய ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்காக கூறுகிறார். முதலில் இருக்கும் பெண் விவசாய கடனில் பற்றி பாதிக்கப்பட்டதாக கூறுகிறார். ஆக்சிஜனால் இறந்தவர்கள் பற்றி இரண்டாவது பெண்ணுக்கு ஒரு கதையை கூறுகிறார். மூன்றாவது பெண்ணுக்கு போபால் விஷவாயு பற்றி கூறுகிறார். இடைவேளை வரை மூன்று பெண்கள் வரை தான் கூறியிருந்தார். இரண்டாவது பாகத்தில் அடுத்த மூன்று பெண்கள் பற்றி கூறி உயிரை எடுக்க போகிறார். இவர் மிலிட்டரி கரப்ஷன் வரை காட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் பார்க்கும் பொழுது நாம் இந்த ஜென்மத்தில் தான் இருக்கிறோமா? போன ஜென்மத்திலேயே இந்த படத்தை பார்த்து விட்டோமா என்கிற எண்ணம் தோன்றுகிறது.

தொடர்புடையவை  அடிக்கடி வெளிநாடு செல்லும் ஹீரோவால் பாதிப்படையும் படப்பிடிப்பு!ரகசிய காதலியுடன் சந்திப்பா?

படம் சூர மொக்கை.! அட்லீ ஒரு Cringe Pro Max.! ஜவான் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 3
மணி ஹைஸ்ட் தொடங்கி ஒவ்வொரு சீனும் காப்பி அடித்து வைத்திருக்கிறார். அவர் எடுத்த படத்தையே அவரே காப்பி அடித்து வைத்திருக்கிறார். கிரிஞ்ச் ப்ரோ மேக்ஸ் ஆக இருக்கிறார். நயன்தாரா நார்மல் பெண்ணா? அல்லது சூப்பர் வுமான என்று தெரியவில்லை. ஜெயிலில் 5000 பேர் சுற்றிக் கொண்டிருக்கிறான், கார் சேசிங் செய்கிறேன் என்று சொல்லி உயிரை வாங்குகிறார்கள். படம் முழுவதும் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார். படம் சூர மொக்கையாக இருக்கிறது. இந்த படத்தை அனைவரும் சென்று பார்த்து அட்லீயை பிரம்மாண்ட இயக்குனராக வேண்டும் அப்போதுதான் அவர் இந்திய திரை உலகிற்கு சென்று படம் எடுத்து நம் தலையை தப்பிக்க வைப்பார் என்று விமர்சனங்களை கூறினார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment