சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய விஷயத்தை தற்போது வீட்டில் உள்ள அனைவரும் அப்பத்தாவிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பத்தா இந்த முறை ஆதி குணசேகரன் திரும்பி வரும்பொழுது இன்னும் வீரியத்துடன் திரும்பி வருவார் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய எபிசோடில் சுவடி எடுத்து பார்க்கும் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. குணசேகரன் இரண்டாவது குழந்தையாக பிறந்திருக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்ல விசாலாட்சி திருதிருவென முழிக்கிறார். இதனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை முடித்துவிட்டு அவருக்கு அண்ணன் இருப்பது போல கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டில் உள்ள அனைவரும் அப்பத்தாவிடம் ஆதி குணசேகரன் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பத்தா இந்த முறை ஆதி குணசேகரன் திரும்பி வரும் பொழுது இன்னும் வீரியத்துடன் திரும்பி வருவார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஜான்சி ராணியும் இனிமேல் இதே வீட்டில் தான் இருப்பார் என்று விசாலாட்சி கூற, கண்டவர்களை எல்லாம் வீட்டிற்குள் ஏற்றுகிறீர்களே என்று நந்தினி பேசுகிறார். அப்போது கண்டவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டுதான் என் மகனை நான் இப்படி தொலைத்து விட்டேன் என்று சொல்லி விசாலாட்சி மருமகள்களை அசிங்கப்படுத்துகிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV