கடனை திரும்பி கட்டாத விஜயாவை ரூமில் அடைத்து வைத்த பைனான்ஸ் நிறுவனம்.! சிறகடிக்க ஆசை Promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டை அடமானம் வைத்த பைனான்ஸ் காரர்கள் பணத்தை கட்டுமாறு வீடு தேடி வந்து விஜயாவை மிரட்டுகின்றனர். இதனால் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் விஜயாவிடம் இருந்து பணத்தை மீனாவின் தம்பி பறித்து விடுகிறார். இதனால் விஜயாவை பைனான்ஸ் அலுவலகத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டி விடுகின்றனர். அப்போது அங்கு மீனா வருகிறார். இதனால் விஜயா வீட்டை அடகு வைத்த விஷயம் தெரிந்து விடுமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடனை திரும்பி கட்டாத விஜயாவை ரூமில் அடைத்து வைத்த பைனான்ஸ் நிறுவனம்.! சிறகடிக்க ஆசை Promo 1
விஜயா, வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து பணத்தை தனது மூத்த மகனுக்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பணம் கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தைக் கேட்டு விஜயாவின் வீட்டிற்க்கே வருகின்றனர். விஜயா பணத்தை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது பணத்தை எடுக்காமலேயே உன் மீது திருட்டுப் பழியை சுமத்தினார்கள், உண்மையிலேயே நீ பணத்தை திருடிக் காட்டு என்று சொல்லி பணத்தை திருட மீனாவின் தம்பியை ஒருவன் தூண்டுகிறான். இதனால் மீனாவின் தம்பியும் விஜயாவின் பையில் இருந்த பணத்தை திருடி விடுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கடைசி 2 இடங்களை பிடித்த போட்டியாளர்கள்.! வெளியேறப்போவது யார்.? CWC ப்ரோமோ.!

கடனை திரும்பி கட்டாத விஜயாவை ரூமில் அடைத்து வைத்த பைனான்ஸ் நிறுவனம்.! சிறகடிக்க ஆசை Promo 3
பின்னர் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செல்லும் விஜயா தன்னுடைய பையை திருடிவிட்டதாக கூற, அதை நம்ப மறுக்கும் நிறுவனம் விஜயாவை பிடித்து ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். அப்போது அங்கு மீனா வருகை தருகிறார். இதனால் விஜயா வீட்டை அடமானம் வைத்தது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அதிரடி திருப்பங்களுக்கு சீரியல் தயாராகி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment