ஈஸ்வரியின் முன்னாள் காதலர் தான் ஜீவானந்தம்.? வைரலாகும் எதிர்நீச்சல் பழைய எபிசோட் வீடியோ இதோ.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கு ஒரு ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது குறித்து தற்போது இணையத்தில் ரசிகர்கள் விவாதத்தை தொடங்கி இருக்கின்றனர். ஜீவானந்தத்திற்கு போன் செய்து பேசும் ஈஸ்வரியை பார்த்து நீங்கள் குணசேகரனின் மனைவி என்பதற்காக நான் உங்களிடம் பேசவில்லை நீங்கள் ஈஸ்வரி என்கிற காரணத்தினால் தான் உங்களிடம் பேசுகிறேன் என்று ஜீவானந்தம் கூறுவது போன்ற ஒரு ப்ரோமோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் தற்போது கல்லூரி காலத்தில் ஈஸ்வரியில் காதலித்த அந்த நபர் தான் ஜீவானந்தமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது இப்படி இருக்க எதிர்நீச்சல் சீரியலின் பழைய எபிசோடு ஒன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலராக இருப்பாரோ என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரியின் முன்னாள் காதலர் தான் ஜீவானந்தம்.? வைரலாகும் எதிர்நீச்சல் பழைய எபிசோட் வீடியோ இதோ.! 1

ஈஸ்வரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்து புரட்சிகரமான நபர் ஒருவரை காதலித்து வருவார். அதை ஒருமுறை ஜனனியிடம் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். வேலையில்லாமல் படிக்கும் ஒரு இளைஞராக இருந்தவர் ரோட்டில் ஒரு முறை புரட்சிகர கருத்துக்களை எழுதிக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்ததும் அவர் மீது ஈஸ்வரிக்கு காதல் ஏற்படும். பின்னர் அந்த நபர் ஈஸ்வரியின் தகப்பனை தேடி வந்து ஈஸ்வரியை பெண் கேட்பார்் ஆனால் அவருக்கு பெண் தர முடியாது என்று சொல்லி வீட்டை விட்டு விரட்டி அடித்து விட்டு ஈஸ்வரியின் தகப்பனார் அவரை குணசேகரனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார். இந்த கதையை ஈஸ்வரி ஜனனிடம் கூறிக் கொண்டிருப்பார். ஜீவானந்தத்தின் என்ட்ரியின் பொழுதே ரசிகர்கள் இவர்தான் ஈஸ்வரியின் முன்னாள் காதலராக இருப்பாரோ என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தத்திற்கு போன் செய்யும் ஈஸ்வரி நான் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி பேசுகிறேன் என்று கூற, நீங்கள் குணசேகரன் மனைவி என்பதால் உங்களிடம் பேசவில்லை. நீங்கள் ஈஸ்வரி என்பதால் உங்களிடம் பேசுகிறேன் என்று கூறுவார். இதனால் ரசிகர்கள் கண்டிப்பாக ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் முன்னாள் காதலர் என்று கட்டியம் கூற தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது பழைய எபிசோடு ஒன்றில் ஜனனியிடம் ஈஸ்வரி தனது காதலர் பற்றி கூறிக் கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்