இன்று காலை முதலே சின்னத்திரையை உலுக்கி வரும் ஒரு செய்தி தான் நடிகர் மாரிமுத்துவின் மரணம். 57 வயதாகும் மாரிமுத்து மாரடைப்பால் காலமாகி இருக்கும் செய்தி எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களை மிகவும் பாதித்திருக்கிறது. சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. பின்னர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார்.
படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் நடிப்புத் துறை பக்கம் தனது ஆர்வத்தை திருப்பினார்.
யுத்தம் செய், நிமிர்ந்து நில், ஆரோகணம், கொம்பன், மருது, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் வில்லனுக்கு உதவியாளராக நடித்து அசத்தியிருந்தார் மாரிமுத்து. இவர் திரையில் தோன்றிய காட்சிகள் எல்லாம் கைத்தட்டல்களை பெற்றது.
வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் பேரிடியாக இன்று காலை அவர் மரணமடைந்திருக்கிறார். அதிகாலை ஆறு மணிக்கு டப்பிங் பேசுவதற்காக சென்ற அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து இருக்கிறார்.
பின்னர் தானே தனது காரை எடுத்துக் கொண்டு மருத்துவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவரது உயிர் அங்கேயே பிரிந்துள்ளது. இந்த செய்தி சீரியல் ரசிகர்களுடைய மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாரிமுத்துவின் “இந்தாமா ஏய்” என்கிற வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென காலமாகி இருக்கிறார்.
அவரது உடலுக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குனர் திருச்செல்வம், சீரியலின் வசனகர்த்தா வித்யா, விபுராமன், சாய் பிரசாந்த் நடிகைகள் கனிகா, மதுமிதா, ஹரிப்பிரியா உள்ளிட்ட பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Youtube Video Embed Code Credits: Polimer News