சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன், தன் தம்பி கதிரின் இந்த நிலைமைக்கு ஜீவானந்தம் தான் காரணம்” என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், ஜீவானந்தம் எதற்காக உங்கள் தம்பியை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? நீங்கள் ஜீவானந்தம் மனைவியை உங்கள் தம்பியை அனுப்பி எதுவும் கொலை செய்து விட்டீர்களா.?” என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்தஅதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் இரண்டாவது தம்பியாக இருக்கும் கதிரை மர்ம நபர்கள் சிலர் நடுரோட்டில் அடித்துப் போட்டு விட்டு செல்கின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் சில மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நிலைமை இப்படியாக இருக்க தற்போது குணசேகரனுக்கு இந்த விஷயம் தெரிய வந்து மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது அவர் எஸ்கேஆர் அல்லது ஜீவானந்தம் இருவரில் ஒருவர்தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரி, “ஜீவானந்தம் எதற்காக உங்கள் தம்பியை இவ்வாறு செய்ய வேண்டும்? நீங்கள் ஜீவானந்தத்தின் மனைவியை உங்கள் தம்பியை அனுப்பி கொலை செய்து விட்டீர்களா?” என்று கேட்கிறார். ஈஸ்வரியின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv