சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் நடிகருக்கும், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை ஹரிகாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்துள்ளனர். இதற்கு நாம் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளி திரையிலும் இதுபோல உடன் நடிக்கும் சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலில் கிருஷ்ண காந்தன் என்கிற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகர் அரவிஷ்.

இவர் சமீபத்தில் முடிவடைந்த ‘திருமகள்’ சீரியலில் ஹீரோயினாக நடித்த ஹரிகா சாது என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

‘சுந்தரி’ சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் நடிகர் அரவிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அரவிஷ் – ஹரிகா உடனான தனது காதலை சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் காதலை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர்.்தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். நேற்று இந்த தம்பதிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அந்தப் புகைப்படங்களை அரவிஷ் மற்றும் ஹரிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இவர்கள் தனது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.