Categories: அரசியல்

எனக்கே பெற்றோரின் பிறந்த வருடம் தெரியாது!

எனக்கே என்னுடைய பெற்றோர்களின் பிறந்த நாள் குறித்த விவரங்கள் தெரியாது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.

எனக்கே பெற்றோரின் பிறந்த வருடம் தெரியாது! 1
ராம் விலாஸ்

சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் பதிவேட்டில் சின்ன பிள்ளை என்று அழைக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெற்றோர்களின் பிறந்த நாள் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஆனால் இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் இது போன்ற விவரங்கள் தெரிந்திருக்க வாய்பில்லாமே இருக்கின்றன. இதனால் பலருடைய ஆதார் அட்டைகளில் கூட வருடம் குறிப்பிடப்படுவதில்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும், பெற்றோரின் பிறந்த இடம், பிறந்த தேதி குறித்த கேள்வியை நீக்குமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருப்பதால், அந்த கேள்விகள் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,”என்னுடைய பெற்றோர்களின் பிறந்த வருடம் கூட தெரியாது. எனவே இது குறித்தான ஆவணங்களை நினைத்து குழம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்