மறைமுக தேர்தலுக்கு தேதி அறிவிப்பு

உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தள்ளி போன இடங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மறைமுக தேர்தலுக்கு தேதி அறிவிப்பு 1
தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று ஜனவரி 2ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் உள்பட அனைத்து மறைமுகபதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

விளம்பரம்

கடந்த ஜனவரி 11ஆம் தேதி நடைபெற மறைமுக தேர்தலில் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு காரணங்களால் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தலின் போது போதிய உறுப்பினர்கள் வராதது உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

விளம்பரம்

இந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிறுத்தப்பட்ட மறைமுக தேர்தல் ஜனவரி 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment