போலி பத்திரிகையாளர்கள் தொடர்பாக விசாரணை: உயர்நீதி மன்ற எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள போலி பத்திரிக்கையாளர்களின் சொத்து விபரங்கள் குறித்து கணக்கிட சிறப்பு குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

போலி பத்திரிகையாளர்கள் தொடர்பாக விசாரணை: உயர்நீதி மன்ற எச்சரிக்கை 1
உயர் நீதி மன்றம்

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விளம்பரம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு பத்திரிகையாளர் சேகர் ராமின் அடையாள அட்டையை சமர்ப்பிக்குமாறு கூறியது.

இதன் அடிப்படையில் சேகரம் அடையாள அட்டையை சமர்ப்பிக்கும் போது அதில் மனுதாரர் சிக்கிக்கொண்டார்.

விளம்பரம்

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் பெயரில் மோசடி பேர்வழிகள் பலர் நடமாடும் அவர்கள் பத்திரிகையின் பெயரை கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து போலியான பத்திரிக்கையாளர்களை களை எடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க உள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  திருப்பதியில் ஏழுமலையான் கோயில் மூடப்படும்! சூரிய கிரகணம் ஏற்படுவதால் தேவஸ்தானம் அறிவிப்பு!!

இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த போலி பத்திரிக்கையாளர்கள் எவ்வளவு விற்பனையாகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

விளம்பரம்

போலி பத்திரிக்கையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு அவர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நியாயமான முறையில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment