“அதே செட், டிரஸ், டான்ஸ்….அடேங்கப்பா கலக்கிய நடனக்குழு”!! விஜய்யின் அரபிக் குத்து பாடலை அதேபோலவே மறு ஆக்கம் செய்துள்ள குழு!!

வெளியிட்டது

"அதே செட், டிரஸ், டான்ஸ்....அடேங்கப்பா கலக்கிய நடனக்குழு"!! விஜய்யின் அரபிக் குத்து பாடலை அதேபோலவே மறு ஆக்கம் செய்துள்ள குழு!! 1

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் நடிகர் விஜய்யின் “பீஸ்ட்”. பூஜா ஹேக்டே, வி.டி.வி. கணேஷ், செல்வராகவன், யோகிபாபு என பலர் நடித்த்த இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என வெற்றி படங்கள் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைத்தது இருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் 210 கோடிக்கு மேல் வசூல் செய்து காட்டியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் நடிகர் விஜய்யின் படங்கள் என்றால் அதில் பாடல்களும், அதற்கான நடனமும் மிக சிறப்பாகவே அமையும். அதனாலேயே அவர் மிக பெரிய குடும்ப ரசிகர்களை கொண்டுள்ளார். “பீஸ்ட்”  படத்தில் மொத்தமே இரண்டு பாடல் காட்சிகள் தான். ஒன்று அரபிக் குத்து மற்றொன்று விஜயே பாடிய “ஜாலியோ ஜிம்கானா” பாடல். முதல் பாடலான அரபிக் குத்தை இசைமைப்பாளர் அனிருத்தே பாடியிருந்தார். சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதி இருந்தார்.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த பாடலின் லிரிக் வீடியோ மிக பெரிய வெற்றியுடன் படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படம் வெளியான பிறகு எப்போதும் போல நடிகர் விஜய்யின் சிறப்பான நடனம், செட் அமைப்பு, மியூசிக் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது இந்த பாடலை அப்படியே மறு ஆக்கம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர் ஒரு நடன குழு. அதே ,மாதிரியான உடை, செட், நடனம் என மொத்தம் அந்த படம் போலவே அமைத்து மிக சிறப்பாகவே வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy – Dinesh

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்