அடுத்த குணசேகரன் யார்.? மாரிமுத்து இறந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இணையத்தில் எழுந்த விவாதம்.!

வெளியிட்டது

நேற்று மாரடைப்பால் மாரிமுத்து காலமான நிலையில் அவர் நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற விவாதம் எதிர்நீச்சல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இணையத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை பரப்பி வருகின்றனர். நடிகர் மாரிமுத்துவின் இழப்பு சின்னத்திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்து வருகிறது. நேற்று வரை நன்றாக இருந்த மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்ற சோகம் அவருடன் நடித்த நடிகர்கள் மட்டுமில்லாமல் அவரை இத்தனை நாள் திரையில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மாரிமுத்துவுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக அவரது உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். 35 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் கிடைக்காத அங்கீகாரம் கிடைத்து வந்து சமயத்தில் திடீரென காலமாக இருந்தார் மாரிமுத்து.

அடுத்த குணசேகரன் யார்.? மாரிமுத்து இறந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இணையத்தில் எழுந்த விவாதம்.! 1

 

மதியம் ஒரு மணிக்கு மேல் ஆன நிலையில் தற்போது அவரது உடல் தகனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என அனைவரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை இனி யார் ஏற்று நடிக்க இருக்கிறார்கள் என்கிற விவாதம் எதிர்நீச்சல் ரசிகர்களையே எழுந்துள்ளது. மாரிமுத்துவின் உடல் கூட இன்னும் தகனம் செய்யப்படாத நிலையில் அதற்குள் அடுத்த விவாதத்தை ஆரம்பித்திருக்கின்றனர். யாராலும் இட்டு நிரப்ப முடியாத கதாபாத்திரமான ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் இளவரசு அல்லது வேலராமமூர்த்தி இருவரில் ஒருவர் பொருத்தமாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நேற்று செய்தியாளர்கள் இயக்குனர் திருச்செல்வத்திடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவர் அது குறித்து பேசும் தருணம் இதுவல்ல என்று பதில் அளித்திருந்தார். இருந்தபோதிலும் எதிர்நீச்சல் சீரியல் இந்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறி வருகின்றனர். வேலராமமூர்த்தி மாரிமுத்து போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளதால் அவர் இதில் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும் பிரபல நடிகராகவும் இருக்கும் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்