Categories: சினிமா

“தந்தை கனவை நிறைவேற்றிய ”- ஜெயம்ரவி!

வெளியிட்டது
“தந்தை கனவை நிறைவேற்றிய ”- ஜெயம்ரவி! 1

என் தந்தை எடிட்டர் மோகன், நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ ஆக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தவர். ஆனால் அவரது கனவு நடக்கவில்லை எடிட்டர் ஆகி விட்டார். நான் நடிகனாகவும் எனது அண்ணன் மோகன்ராஜா இயக்குனராகவும் மாறி விட்டோம். அவரது கனவை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். இதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

மூன்று சுற்று ஓடி வெற்றி கிடைக்க கூடிய நான்காவது சுற்றை எங்களிடம் அவர் தந்து இருந்து வருகிறார். அதை பொறுப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. எனது தந்தை ‘தனிமனிதன்’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இதன்மூலம் மற்றவர்களுக்கும் அவரது அனுபவங்களை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். எனது அம்மா காந்திகிராமத்தில் படித்தவர்.

காந்தியின் நல்ல குணங்கள் அனைத்தையும் அம்மாவிடம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார். அவர் ‘வேலியற்ற வேதம்’ என்ற நூலை எழுதி இருக்கிறார்.” இவ்வாறு ஜெயம்ரவி கூறினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்