
மாதவனுடைய விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். சீதக்காதி படத்தில் வயதானவராகவும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்திருந்தார். தற்போது விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் . மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்தி படவாய்ப்பும் வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தியன்-2 படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. சேனாதிபதியாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஊழல்வாதிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்படுவது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . தற்போது கமல்ஹாசன் காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஓய்வெடுத்து வருகிறார்.
விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.