“நான் முட்டாளா இல்லை நீ முட்டாளா”!! ட்விட்டரில் அனல் பறக்கும் பார்த்திபன்-மாறன் சண்டை”!!

வெளியிட்டது

விமர்சகர்களும் சினிமா துறையினர் இருவரிடமும் எப்போதும் சண்டை வருவது வழக்கமே. ஆனால் சமீபகாலமாக இந்த சம்பவங்கள் கொஞ்சம் அதிகரிக்க துவங்கியுள்ளன. மீடியாக்கள் அதிகமாகியுள்ளதால் நிறைய பேர் படங்களை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் இப்பொது நிறைய பேருக்கு உலக சினிமா தேடல்கள் அதிகமாக கிடைக்கும் நிலையில், ஒரே ஒரு சிறிய தப்பு கூட பெரிய தவறாக மாறி போகிறது.

"நான் முட்டாளா இல்லை நீ முட்டாளா"!! ட்விட்டரில் அனல் பறக்கும் பார்த்திபன்-மாறன் சண்டை"!! 1

சென்ற வாரம் நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான படம் “இரவின் நிழல்”. இந்த படம் சாதாரண ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. எழுத்தாளர் பார்த்திபனை இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்த நிறையவே மக்களிடம் மேக்கிங்காக பாராட்டுகளை குவித்து வருகிறார் பார்த்திபன்.

நிறைய விமர்சகர்கள் பாராட்டினாலும், எப்போதும் போல ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமே கொடுத்துள்ளார். குறிப்பாக “Non-linear singular shot” என்ற பெருமையுடன் இந்த படம் வெளியாக, அதனை ஆரம்பம் முதலே தவறான கருத்து என மாறன் விமர்சனம் செய்து வருகிறார். ஈரானிய மொழியில் “Fish & cat” (2013) ஆம் ஆண்டே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதாக அவர் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் பார்த்திபன் அதனை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.

இப்போது நடிகர் பார்த்திபனுக்கு ஆதரவாக ட்விட்டர் பயனாளி ஒருவர், “Fish & cat” (2013)” அப்படி படமாக்க படவில்லை என தன்னுடைய கருத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த இடியட் மீண்டும் மீண்டும் அவரே கூறிக்கொண்டிருக்குகிறார் என எழுதி பகிர்ந்துள்ளார்.

இதனை பகிர்ந்த மாறன், “பார்த்திபன் மறுபடியும் எதோ ஒரு பயனாளியின் கருத்தை கொண்டு என்னை இடியட் என கூறுகிறார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என எழுதி பார்த்திபனின் டீவீட்டை பகிர்ந்துள்ளார். இருவரும் இவரு மாறிமாறி ஒருவரை ஒருவர் இடியட் என்ற வார்த்தைகளால் திட்டி கொள்வது, மக்களுக்கு கொஞ்சம் சங்கடத்தை தான் கொடுத்துள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்