Categories: சினிமா

‘ஃபைட் கிளப்’ன்னு வச்சதுக்கு பதிலாக ‘கஞ்சா கிளப்’ ன்னு வச்சிருக்கலாம்.! திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.!

வெளியிட்டது

உறியடி விஜயகுமார் நடிப்பில் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருந்த ‘ஃபைட் கிளப்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். வழக்கம் போல இந்த படம் குறித்தும் அவர் நெகட்டிவ் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார். படம் குறித்து அவர் கூறும் பொழுது, “ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரத்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அந்த கதாபாத்திரம் காணாமலேயே போய்விட்டது. படம் முழுக்க தெற்க, வடக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உருப்படியான ஒரு சண்டை காட்சிகள் கூட இல்லை. படம் ஓடுகிறதோ, இல்லையோ? இவன்க படம் பூரா ஓடிக் கொண்டிருக்கிறான்” வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஃபைட் கிளப்’ன்னு வச்சதுக்கு பதிலாக ‘கஞ்சா கிளப்’ ன்னு வச்சிருக்கலாம்.! திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.! 1
“படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘கஞ்சா கிளப்’ என்று வைத்திருக்கலாம். ஏனென்றால் ஒன்னு கஞ்சா கடத்துறானுங்க, இல்ல கஞ்சா விக்கிறாங்,க இல்ல கஞ்சாவை சிகரெட்டில் வைத்து ஊதிக் கொண்டிருக்கிறான். இதனால் தியேட்டர் பூரா ஒரே புகை மண்டலமாக மாறிவிட்டது. நமக்கே கிறக்கம் வர அளவிற்கு இந்த படத்தை கஞ்சா பற்றி எடுத்து வைத்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரம் வலிமையாக வடிவமைக்கப்படவில்லை. வில்லனுடைய அதிகபட்ச வில்லத்தனமே ஹீரோவை கூப்பிட்டு உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு கனெக்ஷனுமே இல்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மொக்க படத்தை கேமரா ஒர்க், மேக்கிங் ஸ்டைல், மியூசிக் இந்த மூன்றும் தான் காப்பாற்றியது.

ஈசியாக ஜெயிக்க கூடிய ஃபார்முலாவுடன் இருக்கும் இந்த படத்தை உப்பு சப்பில்லாத திரைக்கதையை எடுத்து ஒன்றுமில்லாத படமாக மாற்றி விட்டார்கள்” என்று தனது விமர்சனங்களை முன் வைத்தார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்