நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். வருகிற 14ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யா ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில் ஹிந்தி ப்ரோமோஷனுக்கு சென்ற அவர் காலதாமதமாக சென்றதால், அங்கிருந்த செய்தியாளர் சூர்யாவிடம் கடுமையாக பேசி உள்ளார். ஆனால் சூர்யா அவரிடம் பொறுமையாக பேசி மன்னிப்பு கோரி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.