வங்கதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து! 13 பேர் பலி!!

வங்கதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து! 13 பேர் பலி!! 1

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவிற்கு அருகே உள்ள கெரானிகன்ச் நகரத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று மதியம் எதிர்பாரத வகையில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது .

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி அனைத்தனர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உரிய அனுமதி இன்றி அந்த தொழிற்சாலை இயங்கி வந்ததாக அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment