விஜய் ஆண்டனி, சத்யராஜ் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் வள்ளிமயில் படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது. இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடிப்பின் மீது வந்த ஆர்வத்தால் நடிக்க வந்தவர் விஜய் ஆன்டனி. இவர் நடித்த நான். சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை முண்ணனி இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு கதாநாயகியாக பரியா அப்துல்லா நடித்துள்ளார். இது காமெடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 1980களில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படத்திற்கான படபிடிப்புகள் நடந்து வருகின்றன. படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. 1980ம் காலப்பகுதியில் நடைபெறும் கதை என்பதால் பழைய சென்னையை காட்டும் வகையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. பின்னர் மூன்றாம் கட்ட படபிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.தற்போது படத்தின் ஃபர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.