சந்திரமுகி 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்.! படத்தில் இணைந்த வடிவேலு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 90’ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது சந்திரமுகிதான். 2005ம் ஆண்டு வெளியான இப்படம் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல் ஆகியோர் நடித்து அசத்தியிருப்பார்கள்.

சந்திரமுகி 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்.! படத்தில் இணைந்த வடிவேலு 1

விளம்பரம்

அந்த படத்தை பார்த்துவிட்டு 90’ஸ் கிட்ஸ்கள் இரவு நேரத்தில் பாத்ரூம் செல்லக் கூட பயந்து நடுங்கிய காலங்களும் உண்டு. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்.! படத்தில் இணைந்த வடிவேலு 3

விளம்பரம்

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ்-ம், ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் தற்போது துர்கா, ருத்ரன், அதிகாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லாரன்ஸ் அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆனதால் சந்திரமுகி 2 கைவிடப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த படத்தின் படபிடிப்புகள் துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தொடர்புடையவை  ரஜினியின் 73வது பிறந்தநாளில் 'தலைவர் 170' படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு..! வீடியோ உள்ளே..!

சந்திரமுகி 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்.! படத்தில் இணைந்த வடிவேலு 5

விளம்பரம்

இந்த படத்தை தயாரிக்க சன் pictures முன் வந்தது. ஆனால் அவர்களும் பின் வாங்கவே படத்தின் உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தையும் பி.வாசுவே இயக்க உள்ளார்.

விளம்பரம்

மற்றொரு இனிப்பு செய்தியாக காமெடி ரோலில் வைகைப் புயல் வடிவேலும் நடக்க உள்ளாராம்.. முதல் பாகத்தில் வடிவேலு காமெடி இன்றளவும் மறக்க முடியாது. மாப்பு வச்சிட்டான் டா ஆப்பு போன்ற வசனங்கள் இன்றும் பேசப்படுகிறது. முதல் பாகம் போன்று அல்லாமல் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாகுபலி போன்ற படங்களில் இசையமைத்த மரகதமணி இசையமைத்துள்ளார். தற்போது இந்த அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியாகி உள்ளது அதை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment