Categories: சினிமா

நடிகர் சசிகுமார் மிரட்டும் FREEDOM படத்தின் Glimpse வீடியோ வெளியாகியது..!

வெளியிட்டது

இயக்குனராக தமிழ் சினிமாவில் வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகசிறந்த நடிகர் என பெயர் எடுத்து உள்ளார் சசிகுமார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், நாடோடிகள் படத்திற்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தற்போதுவரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது சசிகுமார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சசிகுமார் மிரட்டும் FREEDOM படத்தின் Glimpse வீடியோ வெளியாகியது..! 1

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அயோத்தி மற்றும் கருடன் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது. இதனால் சசிகுமாரின் மார்க்கெட் அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இரா சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் ஜோடியாக ஸ்ருதி பெரியசாமி நடித்து இருக்கிறார்,இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தற்போது இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சத்யா சிவா இயக்கத்தில் ப்ரீடம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லிஜோமோல் நடித்து உள்ளார்.ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Embed Video Credits : TREND MUSIC

வெளியிட்டது

புதிய செய்திகள்