ஈரமான ரோஜாவே 2 சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அது குறித்து அந்த சீரியலின் கதாநாயகியாக இருக்கும் கேப்ரியல்லா விளக்கம் அளித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஈரமான ரோஜாவே சீரியலின் பாகம் 2 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கேபி காவியா என்கிற கதாபாத்திரத்திலும், சித்தார்த் பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகர் திரவியம் ஜீவா என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை சுவாதி பிரியா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால், ஜீவாவும் காவியாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கு காவியாவின் அக்கா பிரியாவை திருமணம் செய்ய நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் திருமணத்தன்று பிரியா காணாமல் போய்விடுகிறார் பிரியாவை பார்த்திபனின் அத்தை தேவி கடத்தி வைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்திபனின் அத்தை தேவிக்கு தனது மகள் ரம்யாவைத்தான் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் பிரியாவை கடத்தி வைக்கிறார் அத்தை தேவி. இதனால் குழப்பம் நிலவும் நிலையில் பார்த்திபன் வேறு வழியில்லாமல் தனது தம்பியை காதலித்து வரும் காவியாவை திருமணம் செய்கிறார். ஆனால் பாத்திக்கு தனது தம்பியும் காவியாவும் காதலித்து வரும் விஷயம் தெரியாது. பெற்றோர்களின் வற்புறுத்தலால் பார்த்திபனினை திருமணம் செய்து கொள்ளும் காவியா அவருடன் வேண்டா வெறுப்பாக இத்தனை காலமாக வாழ்ந்து வருகிறார். தற்போது மனக் கசப்புகள் அனைத்தும் மறைந்து மீண்டும் பார்த்திக்கும் காவியாவிற்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக பார்த்திபன் மற்றும் காவியாவின் திருமணத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகத் தொடங்கியது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளியான ப்ரோமோக்கள் கூட இறுதி தருணங்களை நோக்கி என்கிற ரீதியில் வெளியிடப்பட்டது. 300 எபிசோடுகளை கடந்துவிட்ட ஈரமான ரோஜாவே பாகம் 2-வின் இயக்குனர் தாய் செல்வமும் மறைந்து விட்டதால்_ இந்த சீரியலை அவசரகதியில் முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகியாக இருக்கும் கேபி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த சர்ச்சைகள் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த சீரியல் முடிவதற்கான காரணங்கள் குறித்து தான் ஆராய்ந்த போது பார்த்தி காவியா திருமணம்தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் விளக்கமும் அளித்தார். அவரின் அந்த முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Gabriella