விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் கேப்ரியல்லா தற்போது பாடல் ஒன்றிற்கு மஞ்சள் நிற புடவையில் நடனம் ஆடி இருக்கிறார். இந்த வீடியோ பல இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்திருக்கிறது. தனது ஆறு வயது முதல் நடனமாடி வரும் கேப்ரியல்லா நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜுனியரில் கலந்து கொண்டு டைட்டிலையும் பெற்றிருந்தார். பின்னர் அவருக்கு 3 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். அதே சமயத்தில் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7-C என்னும் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்குள் அறிமுகமானார் கேபி. அதன் பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் திரைத்துறையை விட்டு விலகி வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று கேபி நினைத்திருந்த வேளையில் கொரோனா தொற்று காரணமாக லாக் டவுன் ஏற்பட்டது. அதனால் கேபிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. எனவே அந்த சமயத்தில் அவருக்கு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஒரு அழைப்பு வர, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீசன் 4-ல் அவர் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கேபிக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஈரமான ரோஜாவே சீசன் 2வில் காவியா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரின் ஹீரோயினாக அவர் நடித்து வருகிறார். காவ்யா மற்றும் பார்த்தியின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் நாடகத்தை விரும்பி பார்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கேபி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மேலும் நடனமாடி அந்த வீடியோக்களையும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் மஞ்சள் நிற புடவையுடன் அவர் ட்ரெண்டிங் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு அவரை யாரோ பார்த்து விட வெட்கப்பட்டு ஓடிய கேபி, அந்த வீடியோவை ஆஃப் செய்கிறார். செம்ம க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O