கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலகியது குறித்து அதில் நடித்து வந்த நடிகர் நந்தா தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். பலரும் பல விதமான புரளிகளை கூறி வந்த நிலையில் தற்போது அவரே விலகலுக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியல் தாய் தந்தையை இணைக்க போராடும் மகளின் கதை என்கிற வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஹீரோவாக ராம் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் நந்தாவும், ஹீரோயினாக பானு என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ராவும் நடித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து நந்தா விலகியிருந்தார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி புதிய ராமாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பலரும் நந்தாவின் விலகலுக்கான காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்து இருக்கிறார்.

அதில் கண்ணே கலைமானே சீரியலில் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்ட போது தனது காலில் அடிபட்டு தசைக் கிழிவு ஏற்பட்டதால் தன்னால் தொடர முடியவில்லை. எனவே தான் சீரியலில் இருந்து விலகினேன். விஜய் டிவி எனக்கு மிகுந்த சப்போர்ட் கொடுத்தார்கள். தற்போது புதிதாக வந்திருக்கும் நவீனுக்கும் நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இன்னும் இந்த சீரியலை 500 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக நீங்கள் நகர்த்திச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O