இயக்குனர் நெல்சனுக்கு உயர் ரக காரை பரிசளித்த கலாநிதி மாறன்.! வீடியோ இதோ.!

ஜெயிலர் படத்தை இயக்கி கோடிகளில் வசூலை குவித்திருந்த இயக்குனர் நெல்சனுக்கு தற்போது கலாநிதி மாறன் உயர் ரக கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. கலாநிதி மாறனை சென்று சந்தித்திருக்கும் இயக்குனர் நெல்சனுக்கு காசோலையும் போர்சே உயர் ரக கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பலரும் நெல்சனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பீஸ்ட் பட தோல்விக்கு பின்னர் நெல்சன் மீண்டு வந்துள்ளதாகவும், இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமாறும் பலரும் நெல்சனை வாழ்த்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சனுக்கு உயர் ரக காரை பரிசளித்த கலாநிதி மாறன்.! வீடியோ இதோ.! 1

விளம்பரம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற பலரது நடிப்பில் உருவாகி இருந்தது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியான 7 நாட்களில் 375 கோடி வசூலை வாரி குவித்திருந்தது. தற்போது வரை சுமார் 600 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் நேற்று சூப்பர் ஸ்டாரை சந்தித்து பிஎம்டபிள்யூ எக்ஸ் செவன் உயர் ரக காரையும், காசோலையும் பரிசாக வழங்கினார். இன்று நெல்சனை சந்தித்து அவருக்கும் காசோலை மற்றும் போர்சே உயர் ரக காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

தொடர்புடையவை  "எது நாய்க்கும் டிக்கெட் எடுத்து கொடுக்கணுமா?"!!"செய்தி வெளியிட்ட ஊடகம்"!!தந்திரமாக பழி தீர்த்து கொண்ட ரஷ்மிகா மந்தனா"!!

இயக்குனர் நெல்சனுக்கு உயர் ரக காரை பரிசளித்த கலாநிதி மாறன்.! வீடியோ இதோ.! 3

விளம்பரம்

கடைசியாக நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனால் மிகக் கேலிக்குள்ளான நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் மூலமாக மீண்டும் வெற்றி இயக்குனராக திரும்பி இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment