நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த இயக்கிய, விஜய் நடிப்பில் 1997ஆம் ஆண்டில் வெளியான “நேருக்கு நேர்” படத்தின் மூலம் காதல் நாயகனாக அறிமுகமானார். படம் வெற்றியை பெற்ற போதிலும் சூரியா பெரிதாக கவனிக்கப்படவில்லை. பின்னர் “காதலே நிம்மதி”, “சந்திப்போமா” என சில படங்கள் நடித்தாலும், முதல் வெற்றியாக இவருக்கு அமைந்தது “பூவெல்லாம் கேட்டுப்பார்” படமே. அதே ஆண்டு மீண்டும் ஜோதிகாவுடன் “உயிரிலே கலந்தது” படத்தில் நடித்தார். இரண்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

மீண்டும் விஜயுடன் ஃப்ரண்டஸ் படத்தில் நடித்தார். இதுவும் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான “நந்தா” படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. படம் மிக பெரிய வெற்றியை கொடுக்க, அதன் பின் அவர் நடித்த “உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆறு, வேல், ஜில்லுனு ஒரு காதல், பிதாமகன், மாயாவி, கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம், சிங்கம் 2, சூரரை போற்று, ஜெய் பீம்” போன்ற பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை அவர் 4 முறை ஃபிலிம் பேர் அவார்ட் என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.
அண்மையில் நடிகர் கமலின் “விக்ரம்” படத்தின் கடைசி 5 நிமிட காட்சிகளில் வந்து மொத திரையரங்கையும் அலறவிட்டார் சூர்யா. ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து போனார்கள். அடுத்தத்தக்க வரும் விக்ரம் 3, கைதி 2 என இரண்டு படங்களிலும் சூர்யா முக்கிய வேடத்திலும் அதுவும் வில்லனாக மிரட்டவுள்ளார் என ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார்.
சூர்யா அடுத்து பாலாவுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் வாடிவாசல் என இரண்டு பெரிய படங்களில் நடித்துவருகிறார். டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியை தொடர்ந்து கோவாவில் ஜுலை மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் நடிகை சாய்பல்லவியின் நடிப்பில் உருவாகியுள்ள “கார்கி” என்ற படத்தை தமிழகத்தில் வெளியிட உரிமையை பெற்றுள்ளனர். இப்படத்தை ரிச்சி பட இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இப்பொது 2ஜி நிறுவனம் சார்பில் அந்த படம் தமிழகத்தில் வெளியாகவுள்ளது.
இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “நானும் ஜோதிகாவும், கார்கி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. இந்த படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புதிய சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கு கார்கி பிடிக்கும் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.