பிரபல தமிழ் நடிகையாக இருக்கும் காயத்ரி சங்கர் தற்போது ஸ்டான்ட் அப் காமெடியன் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் தகவலை ஸ்டாண்ட் அப் காமெடியன் மறுத்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா? என்று நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார். வெள்ளித் திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் காயத்ரி சங்கர். இவர் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகத்தோற்றம் உடையதால் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். இந்த படத்திற்கு பின்னர் பெரிதும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். பின்னர் பொன் மாலைப்பொழுது, மத்தாப்பு போன்ற சில படங்களில் நடித்த இவர் ரம்மி என்கிற படத்தில் இனிகோ பிரபாகரனுக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் இவர் புரியாத புதிர் என்கிற படத்திலும் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தார். இந்த படங்களுக்குப் பிறகு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்திலும், சீதக்காதி என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தில் நடித்தார். கடைசியாக விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் இவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி காரில் வைத்து இவரை கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சிகள் பெரிய டவிஸ்ட்டாக இருந்தது. மேலும் பல மீம் டெம்ப்ளேட்டுகளிலும் காயத்ரியின் இந்த காட்சிகள் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் தமிழ், மலையாளம் என்று பிசியாக நடித்து வரும் காயத்ரி பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் ஷா என்பவரை காதலித்து வருவதாக பிரபல தனியார் நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டது. youtube இல் அரவிந்த ஷா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது, லுங்கி டான்ஸ் என்கிற பாடலை கலாய்த்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் மிகப்பெரிய வைரலானது.
தற்போது வெளிநாடுகள், வட இந்தியா, தென்னிந்தியா என பல ஊர்களிலும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அரவிந்த ஷாவுடன் காயத்ரி டேட்டிங் செய்து வருவதாக பிரபல தனியார் நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டது. மேலும் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த செய்தியை அரவிந்த் ஷா முற்றிலும் மறுத்து இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அவரின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து இதை உன் முகப்பு பக்கத்தில் போடுங்கடா என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். அவர் செய்தி வெளியிட்ட பத்திரிக்கை குறித்து ஏற்கனவே தனது ஸ்டாண்ட் அப் காமெடியில் பேசிய வீடியோவை பகிர்ந்து பதில் அளித்துள்ளார்.