சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு பலியான கயல்.! கயலை கடத்தி அடைத்து வைத்த கெளதம்.!

கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கயலை தற்போது கௌதம் மற்றும் அவரின் ஆட்கள் கடத்திக்கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் கயல் சீரியலில் தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. எழிலுக்கும் கயலின் பெரியப்பா மகள் ஆர்த்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது கடந்த மூன்று வாரங்களாக இதே காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களுக்கு சற்று சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் விரைவில் இந்த திருமணத்தை நடத்தி முடிக்குமாறு இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு பலியான கயல்.! கயலை கடத்தி அடைத்து வைத்த கெளதம்.! 1

விளம்பரம்

 

தற்போது எழிலின் தாயார் சிவசங்கரி கயலை கடத்தி விடுமாறு கௌதமிற்கு அறிவுரை வழங்குகிறார். அதன்படி கௌதமும் கயலை தனது அடியாட்கள் மூலம் கடத்துகிறார். வாயில் துணியைப் பொத்தி அவரை கடத்தி ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார். இதனால் எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறாதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. நிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்க, மற்றொரு பக்கம் ரசிகர்கள் சீரியல் இயக்குனரை கழுவி ஊற்றி வருகின்றனர். கடந்த 3 வாரமாக ஆடைகளைக் கூட மாற்றாமல் அப்படியே வரவேற்பை நடத்திக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜேம்ஸ் வசந்தன் இசையில், தாமரை பாடிய முதல் ஆல்பம் பாடல்.! பாடகியாக மாறிய தாமரை செல்வி.!

சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு பலியான கயல்.! கயலை கடத்தி அடைத்து வைத்த கெளதம்.! 3

 

விளம்பரம்

தற்போது கதையை எங்கே எங்கேயோ நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பி கொண்டிருப்பது போல இயக்குனர் கதையை இழு இழுவென இழுத்து வருகிறார். இதனால் ப்ரோமோ வீடியோக்கள் கூட பார்வையாளர்களை பெறாமல் மிக குறைவான பார்வையாளர்களையே பெற்று வருகிறது. ரசிகர்களும் கமெண்ட்களில் இந்த சீரியலை கழுவி ஊற்றத் தொடங்கி இருக்கின்றனர். ஆரம்பத்தில் விரும்பி பார்த்த இந்த சீரியலை தற்போது ப்ரோமோ கூட பார்க்க பிடிக்கவில்லை என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment