சீரியலில் இருந்து விலகிய காயத்ரி.? இனி இவருக்கு பதில் இவரா.? எந்த சீரியல்னு தெரியுமா?

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணியாக நடித்து வரும் நடிகை காயத்ரி தற்போது புது சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருந்தார். தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு தொடர் தான் கிழக்கு வாசல். எஸ்.ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்டோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர. அனாதையாக இருக்கும் ஒரு பெண்ணை எடுத்து வளர்க்கும் ஒரு தந்தையின் கதை என்று இந்த கதை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை நடிகை ராதிகா சரத்குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரேடான் மீடியா நிறுவனம் இயக்க இருப்பது அனைவருக்கும் அறிந்ததே. இந்த சீரியல் ஆரம்பித்த புதிதில் நடிகர் சஞ்சீவ் தான் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகி இருந்தார்.

சீரியலில் இருந்து விலகிய காயத்ரி.? இனி இவருக்கு பதில் இவரா.? எந்த சீரியல்னு தெரியுமா? 1

அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகி வரும் ப்ரோமோக்களிலும் அது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்பே ஹீரோ விலகி இருந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அடுத்த விலகலாக மற்றொரு நடிகை ஒருவரும் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதில் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடித்து வரும் நடிகை காயத்ரி தற்போது கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்த சீரியலின் பூஜையில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதன் பின்னர் ஒரு ப்ரோமோவில் தங்களது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி நடிகர்கள் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

அந்த வீடியோவில் நடிகை காயத்ரி கிருஷ்ணனின் கதாபாத்திரம் வெளியாகவில்லை. அப்போதே ரசிகர்கள் காயத்ரியும் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த ப்ரோமோக்களிலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை தாரணி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் மற்றும் ஜீ தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வரும் காயத்ரிக்கு கால்ஷீட் தருவதில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் தொடங்குவதற்கு முன்பே சஞ்சீவ் மற்றும் காயத்ரியின் விலகல்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்