விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில் , ரவுடி சிட்டி உடன் சேர்ந்துகொண்டு சத்யா சுற்றி வருகிறார். மேலும் முத்துவுக்கே கெட்டதும் செய்ய முயற்சி செய்கிறார். வீடியோ கீழேகொடுக்கப்பட்டுள்ளது .

தற்போது முத்துவின் காரில் வந்த கஸ்டமரை சிட்டி மிரட்டி கொண்டு இருக்கவே , அங்கு வந்த முத்து சிட்டியை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்புகிறார். மேலும் தனது மனைவியின் தம்பியான சத்தியாவிடம் அட்வைஸ் கூறுகிறார். சிட்டி உடன் சேர்ந்து சுற்றினால் கட்டாயம் நீ எதிலாவது மாட்டுவே என்கிறார். அதற்கு சத்யா முத்துவை அசிங்கப்படுத்தி செல்கிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சத்யாவுக்கு மாட்டினால் தான் புத்தி வரும் என கூறுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION