தனது பிறந்தநாளன்று குழந்தைக்கு தாயான நடிகை காயத்திரி யுவராஜ்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜிற்கு இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ள செய்தியை அவரது கணவர் யுவராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருக்கிறார். மனைவி காயத்ரியின் பிறந்த நாளிலேயே தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவர் பகிர்ந்து இருக்கிறார். சின்னத்திரையில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ். நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார். பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பலரின் உள்ளத்தை கவர்ந்திருந்தார். பின்னர் அரண்மனை கிளி என்கிற நாடகத்திலும் நடித்திருந்தார்.

தனது பிறந்தநாளன்று குழந்தைக்கு தாயான நடிகை காயத்திரி யுவராஜ்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு.! 1
பின்னர் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தான். இதில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த நாடகங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்லத் திறந்தது கதவு போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியலில் மீனாட்சியின் மகளாக நடித்து வந்தார். இந்த நிலையல் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலை விட்டு விலகி அதிர்ச்சி கொடுத்திருந்தார் காயத்ரி. சமீபத்தில் இவருக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.


திருமணம் ஆகி ஏற்கனவே தருண் என்கிற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் காயத்ரி. இந்த செய்தியை தனது சமூக வரைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த அவரது கணவர் யுவராஜ், “இன்று காலை தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள், அவளது அம்மாவின் பிறந்தநாளிலேயே மகள் பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம், உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி” என்று அவர் கூறியிருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே நடிகைகள் நீலிமா இசை, மேகா, நீபா, ஹேமா ராஜேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இவர்களுடன் இணைந்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Instagram Credits: Gayathiri Yuvaraj

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்