நடிகை காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை தசமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்து முடித்துள்ளது. அந்த வீடியோவை கயாத்திரியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்ததன் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை காயத்ரி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். தென்றல் என்னும் சீரியல் மூலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் ஒன்பதில் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி என்கிற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். தென்றல் நாடகத்திற்கு பிறகு இவர் பிரியசகி, அழகி, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், சித்தி பாகம் 2, மோகினி, களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல நாடகங்களில் நடித்தார்.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலுக்கு பின்னர் பெரிதும் அறியப்பட்ட நடிகையாக இவர் மாறிப் போனார்.
தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியலில் யமுனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் அவர் தற்போது சீரியலை விட்டு விலகி இருந்தார்.
இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு தனது பங்களிப்பை கொடுத்திருந்தார் காயத்ரி.
இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் காயத்ரி.
சில நாட்களுக்கு முன்பு காயத்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போலவும் வயிறு பெரிதாக இருப்பது போலவும் இருந்தது. இது குறித்து ரசிகர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் தொடர்ந்து மௌனம் காத்து வந்த அவர், தற்போது தான் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து வீட்டிலேயே வைத்து எளிமையாக வளைகாப்பு நடத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.
பலரும் காயத்ரிக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் தற்போது 9வது மாத வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் காயத்ரிக்கு யுவராஜுக்கும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.