காயத்ரி ரகுராம் குஷ்புவுடன் மோதலா!

வெளியிட்டது
காயத்ரி ரகுராம் குஷ்புவுடன் மோதலா! 1

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டம் எதிராக பலரும் ஆதரவாக சிலரும் தங்களது கருத்தை தெரிவி்த்து வரும் நிலையில், நடிகர் நடிகைகளும் வலைத்தளத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். நடிகை குஷ்பு ஏற்கனவே டுவிட்டரில் பிரதமர் மோடியையும் மத்திய மந்திரி அமித்ஷாவையும் கடுமையாக சாடி இருந்தார்.

நாட்டில் நிலவி வரும் அமைதியை குலைக்கும் வகையில் சட்டங்களை வெளியிட நீங்கள் யார்? இந்த நாடு மதசார்பின்மையில் வாழ்கிறது என்றார் அவர் கூறினார். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு அவர் பதில் அளிக்கையில் இந்தியர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படுவதுபோல பேசி இருக்கிறார். அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஒழுங்காக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

இதனையடுத்து, கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி கொடு‌க்கு‌ம் வகை‌யி‌ல், மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை குஷ்பு மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில் எச்.ராஜாவை விமர்சித்த குஷ்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடும் எதிர்ப்பை பதிவிட்டார்.

அவர் அந்த பதிவில் கூறும்போது, பொய்யை தவிர உங்களிடம் என்ன இருக்கிறது. நீங்கள் சொன்ன பொய் பட்டியல் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும், பொய் பேசும் உங்களை போன்றவர்களுக்கு புகலிடம் இல்லை” என்று சாடி உள்ளார். ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த நடிகர் சித்தார்த்தையும் காயத்ரி ரகுராம் கண்டித்து இருந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்